பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-4.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மடியும் மறதியும் 73 லிட்ட விளக்காக ஒளி வீசுமாறு செய்யவேண்டிய பொறுப்பு, அக்குடும்பத்தில் பிறந்த ஒவ்வொரு வரையும் சாரும். குடியிற் பிறந்தார் தம் பொறுப்பை உணராது உளங்குன்றி மடியுடையாராயின் அக்குடி அடியோடழியும். குடும்பமாகிய குலமணி விளக்கு, அக்குடும்பத்தில் தோன்றியவனது சோம்பலாகிய இருள் சூழுமாயின் அணந்துவிடும் என்று இயம்பு கிருர் திருவள்ளுவர். குடியென்னும் குன்ரு விளக்கம் மடியென்னும் மாசூர மாய்ந்து கெடும்.' - என்பது அவர் சொல்லமுதமாகும். மேலும், உயிர் வளி உள்ள விடத்துத்தான் விளக்கு ஒளிவிட்டு எரியும். அவ்வுயிர்வளி குறைந்து கரிக்காற்று நிறையு மாயின் விளக்கு அவிந்து போகுமன்ருே அஃதே போல் குடிவிளக்கும் ஊக்கமென்னும் உயிர்வளி உலவுங்காறும் ஒளிவீசி, மடியாகிய கரிக்காற்றுப் புகுந்தவுடன் அவிந்துபோகும். விளக்கணேந்தால் மீட்டும் ஏற்றிக்கொள்ளலாம். ஆனல் குடிப்பெருமை குன்றின் மீண்டும் அதனைப் பெறுதல் இயலாது என்பதை விளக்க, மாய்ந்து கெடும் என்று ஆய்ந்து கூறிய வள்ளுவர் மதிகலம் அதிநுட்பமுடையதன்ருே' ஒருவன் தான் பிறந்த குடியை மேன்மேலும் உயர்ந்தோங்குமாறு செய்யும் உறுதியுடையாயிைன் மடியை அடியோடு ஒழிக்கவேண்டும். நெருப்பைப் போல் கொடியது வேறின்மையால் நெருப்பை நெருப்பாகவே நினைக்க என்பதுபோல மடியினைப் போல் கொடியது பிறிதின்மையால் மடியை மடியா கவே கருதி கடக்க என்று குறித்தார் திருவள்ளுவர்.