பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-4.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் சொல்லமுதம் (நான்காம் புத்தகம்)


க. துறவும் உணர்வும் பொதுமறை அருளிய புலவர் பெருமானுகிய திருவள்ளுவர் தம் முப்பால் நூலுள் முதற்பாலாக வகுத்திருப்பது அறம். அவ்அறமே இம்மை மறுமை வீடு என்னும் மூன்றனையும் பயக்கும் மொய்ம்புடைய தாகலின், அதனைப் பாயிரத்திலேயே வலியுறுத்தி உரைத்தருளினர். அறத்தை கடத்துவதற்குரிய வாழ்வுநெறிகளாக இல்லறம் துறவறம் என்னும் இரண்டையும் வகுத்துரைத்தார். அவற்றுள் இல் லறமே மேலானது என்பதையும் அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை என்று உறுதி தோன்றக் கூறினர். இல்லற இன்பங்களை ஆரத்துய்த்து அகன் றவனே துறவற வாழ்வைத் தாய்மையாகவும் வாய்மை யாகவும் நடத்த முடியும் என்பதை வலியுறுத்த இல் லறவியலே முதற்கண் சொல்லிப் பின்னர் அத்துற வறத்தை விளக்கியருளினர். துறந்தார் மிகவும் சிறந் தார் என்பதை விளக்கப் பாயிரத்திலேயே அவர் பெருமையைப் பேசியுள்ளார். பாயிரத்திலுள்ள கீத்தார் பெருமை என்னும் பகுதி துறவோர் சிறப்பைக் குறிப்பதாகுமன்ருே