உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-4.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் சொல்லமுதம் துறவு நெறியை மேற்கொண்ட மேலோரைப் பல் பெயர்களால் குறிப்பிடுகின்றர் திருவள்ளுவர். கீத்தார், துறந்தார், அறம்பூண்டார், ஒரைந்தும் காப் பார், ஐந்தவித்தார், செயற்கரிய செய்வார், நிறை மொழிமாந்தர், குணமென்னும் குன்றேறி கின்ருர், அந்தணர் முதலான பெயர்கள் அத்துறவோரின் திறனையும் தாய்மையையும் விளக்குவனவாகும், துறவறத்தைப் பதின்மூன்று அதிகாரங்களில் பரக்க விளக்கும் திருவள்ளுவர் அவற்றுள் துறவு என்றே ஒர் அதிகாரத்தையும் வகுத்துள்ளார். புற மாகிய செல்வத்திடத்தும் அகமாகிய யாக்கை யிடத்தும் உள்ள பற்றினே அவற்றின் கிலேயாமை நோக்கி விட்டொழித்தலே துறவு எனப்படும். ஆகவே, அகப்புறப் பற்றுக்கள் அறுவதற்கு இளமையும் யாக் கையும் வளமிகு செல்வமும் நிலையாமையுடையன என்பதை ஒருவன் இனிது உணரவேண்டும். துறவறத்தார் மேற்கொண்டு ஒழுக வேண்டிய நோன்புகள் ஒன்பது என்பர் திருவள்ளுவர். அவற் றைத் தனித்தனியே ஒவ்வோர் அதிகாரத்தால் செவ் வையுற விளக்கியுள்ளார். அருள், புலான் மறுத்தல், தவம், கூடாவொழுக்கம்.தவிர்தல், கள்ளாமை, வாய்மை, வெகுளாமை, இன்னுசெய்யாமை, கொல் லாமை ஆகிய ஒன்பது பண்புகளும் துறவோர் கன வினும் மறவாது கடைப்பிடிக்க வேண்டுவனவாகும். எல்லாவற்றிற்கும் அடிப்படையாக அருளேக் குறிப் பிட்டார் திருவள்ளுவர். துறவோர் உள்ளத்தில் அருள்வெள்ளம் பெருக்கெடுக்குமாயின் பிற பண்பு கள்தாமே அமைந்து விடுவனவாகும். அதேைலயே