உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-4.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ன. அமைச்சும் அங்கமும் காட்டைத் திறம்பட ஆளும் அரும்பெறல் தலே வர்க்குஅங்கமாக அமைவன ஆறு. அவை அனைத்தும் நன்கு அமையப்பெற்ற தலைவன் அரசருள் ஏறனே யான் என்று கூறினர் தெய்வப்புலவர். படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் என்ற ஆறுமே அவ் அங்கங்களாம். இவ் ஆறனுள்ளும் முதன்மை யானது அமைச்சே. காட்டை ஆளும் பொறுப்பில் மன்னற்கு இணையான மாண்பு மதியமைச்சனுக்கு உண்டு. ஆதலின் அரசின் அங்கங்களை விளக்கத் தொடங்கிய திருவள்ளுவர் அமைச்சிற்கே முதலிடம் கொடுத்தார். சூழ்வார்கண்.ணுக ஒழுகலான் மன்னவன் சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்.’ என்பது அவர் சொல்லமுதம். அரசியலில் தக்க அறிவுரைகளை ஆராய்ந்து கூறும் பேரறிவாளராகிய அமைச்சர், அரசனுக்குக் கண்போல் உதவும் அருமையுடையர். அவர்களே நாட்டிற்கேற்ற கல்லாட்சி முறையினைத் தேர்ந்து அமைப்பவர். அதேைலயே அமைச்சர் என்னும் பெயர் பெற்ருர். இதனை அமாத்தியர் என்னும் வட சொல்லின் திரிபு என்பார் சிலர். அமாத்தியர் என்னும் வடசொல் அரசர்க்கு அண்மையில் அமர்ந் * திருப்போர் என்ற பொருளைக் கரும். இக் கருத்துப் பற்றியே வள்ளுவரும் தம் நாலுள் அமைச்சனுக்கு 'உழையிருந்தான் என்ற ஒரு பெயரைக் குறிப்பிடு கிருர் என்பர். -