பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-4.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 வள்ளுவர் சொல்லமுதம் இத்தகைய கல்லியல்புகள் வாய்ந்த கல்லமைச்சர், அரசற்குத் துணேயாய் அமைதல் வன்மையுள் வன்மையாக மதிக்கத்தகும். இங்ஙனம் அரசியலில் அமைச்சர்க்கு இலக்கணம் வகுத்த வள்ளுவர், அமைச்சியலில் அதற்குத் தக்க விளக்கம் தருகின்றர். அமைச்சுத் தொழிலுக்கு அங்கமாய் அமைவன ஐந்து. படையும் பொருளுமாகிய கருவிகள் இரண்டு, வினேசெய்தற்குரிய காலம், அதனைச் செய்து முடிக்கும் இடம், செய்யும் அரிய செயல் ஆகிய ஐந்தும், மந்திரித் தொழிலுக்கு அங்கம் என்றே வடநூலார் குறிப்பர். ஒரு செயலேப் புரியுங்கால் இடையில் தளராத உளவுறுதி, குடிமக்களே இனிது காக்கும் இயல்பு, நீதிநூல்களே ஒதித் தேர்ந்து செய்வனவும் தவிர்வனவும் தெரிதல், அயராத முயற்சி ஆகிய இயல்புகள் அவர்பால் அமைந்திருத்தல் வேண்டும். அரசியல் வினைகளே யாற்றும் அமைச் சர்க்குப் பழிப்புரையும் இழிப்புரையும் பிறப்பது இயற்கை. அன்னர் அவற்றைக் கேட்டு அஞ்சி நெஞ்சம் தளர்தல் தகாது. ஆதலின் வன்கண்மை ஆகிய மனவுறுதியின அமைச்சர் இயல்புகளுள் முதற்கண் வைத்து மொழிந்தார் நம் முதற்பாவலர். வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு} ஐந்துடன் மாண்ட(து) அமைச்சு." என்பது அவர் சொல்லமுதமாகும். நாட்டின் கலங்கருதி, அமைச்சராயினுள் செய வாற்றத் தொடங்குங்கால் மாற்ருர் அதற்குக் கேடு சூழ்வர். அப்பொழுது மாற்ருளின் ஆற்றலைக் குறைத் தற்கு அவர்க்குத் துணேயாவாரைக் கந்திரமாகப் பிரிக்