பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-4.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமைச்சும் அங்கமும் 85 தல்வேண்டும். தம்மைச் சார்ந்தவர்கள் பிரிந்துபோகா வண்ணம் இயைந்த பொருட்கொடையாலும் இன் சொற்களாலும் பேணிக்கொள்ளவேண்டும். முன் னர்த் தம்மைச் சார்ந்திருந்து பின்னர்ப் பிரிந்து போயினுரை மேலும் சேர்த்துக்கொள்ளவேண்டு மாயின் அதனேயும் ஆய்ந்து செய்தல்வேண்டும். இவற்றுள் காலத்தின் சூழ்நிலைக்கு ஏற்ற செயல் அறிந்து ஆற்றவேண்டும். அதனை மாற்றர் அறியாமல் ஏற்ற உபாயத்தால் செய்துமுடித்தலும் வேண்டும். அவ்வாறு செயலாற்றுதல் பெரிதும் அரிதாகும். ஆதலின் இவையெல்லாம் வல்லவனே அமைச்சை வான் என்று சொல்லிப் போந்தார் வள்ளுவர். இக் கருத்துக்களை விநாயக புராண ஆசிரியர் சிறிது விளக்கமாகக் குறித்து வலியுறுத்துகின்ருர்: பகைவர்தம் துணையைப் பிரித்தல்தம் மிடத்துப் பயின்றவர் பகைவர்பால் புகாமல் தகையுறச் செய்தல் பிரிந்தவர் தம்மைத் தம்மொடு பொருத்தலும் அமைச்சாம்.' என்பது அவ் ஆசிரியர் வாக்கு. இனி, அமைச்சர் ஒரு செயலாற்றுமிடத்துக் தம் அரசினச் சார்ந்து உட்பகையாக கின்றே ஊறு செய்வாரைப் பிரித்தலும் வேண்டும். பகைவரை விட்டுப் பிரித்தாரைத் தம்மொடு பேணிச் சேர்த்துக் கொள்ளுதலால் பெருகலம் விளையுமாயின் அதனையும் ஆராய்ந்து செய்தல் வேண்டும். ஒரு காரியத்தைச் செய்து முடிக்கப் பல வழிகள் இருக்கலாம். அவற்றுள் தக்க வழி எதுவென நன்கு எண்ணிச் செய்தல் வேண்டும். அதனைச்செய்யுங்கால்