பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-4.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 i. அமைச்சும் அங்கமும் சொன்னவர் அமைச்சர்கள் துனேவர் மேலேயோர் ஒன்னலர் விழைந்தவா(று) உரைக்கின் ருர்களே.' அரசற்கு திேயை இடித்துரைக்கும் ஆற்றல் உடையாரே கல்லமைச்சராவர். மற்றையோர் உட னிருக்கே கேடு சூழும் உட்பகைவர் என்ருர் கச்சியப்பர். அங்கனம் பக்கத்தில் இருந்தே அரசற்குப் பழுதெண்னும் மந்திரி, பகைவரைக்காட்டினும் பல கோடி மடங்கு கொடியன் என்று குறித்தார் திருவள்ளுவர்.

  • பழுதெண்னும் மந்திரியிற் பக்கத்துள் தெவ்வோர்

எழுபது கோடி யுறும்.” என்பது அவர் சொல்லமுதமாகும். வெளிப்படை யாகக் கானும் பகைவரால் கேடு வாராவண்ணம் பாது காத்தல் முடியும். கூட இருந்தே குரல்வளையை கெரிக்கும் கொடியரைப் போன்ற உட்பகைவரால் வருங்கேட்டை உணர்தல் முடியாது. அதனை அறிந்து, காத்தல் அரிதாகலின் உடனிருந்து ஊறு விளக்கும் தீய அமைச்சரினும் எழுபதுகோடி பகைவர் இனியர் என்று உரைத்தார் தனிப்பெரும் புலவர். சிந்தாமணிக் காவியத்தில் பேசப்பெறும் அமைச் சனகிய கட்டியங்காரன், ஏமாங்கத நாட்டு அரசனகிய சச்சந்தனுக்குப் பழுதெண்னும் மந்திரியாக இருக் தான். அவனுடைய ஆற்றலையும் நயவஞ்சகமாக நடித்த அரசப்பற்றையும் உண்மையென நம்பிய மன்னனுகிய சச்சந்தன் இச்சையுடன் ஆட்சிப் பொறுப்பு முழுதையுமே அவனுக்கு ஈந்தான். அரசி யல் பாரத்தை அமைச்சன்பால் சுமத்திய சச்சங்கன் தன் கோப்பெருந்தேவியாகிய விசயை என்னும் வியத் தகும் எழிலாளுடன் அந்தப்புரத்திலேயே அந்தமிலா