பக்கம்:வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. திருவள்ளுவரின் கடவுட் ೧5767605 ஆரிய வழிபாட்டுக் கொள்கை: திருவள்ளுவர் காலத்துக்கு பின்னரே, தமிழகம் அரிய வழிபாட்டுக் கொள்கையில் ஆழ்ந்துகிடந்தது தெய்வம் உண்டு (குறள்:43, 50, 55, 619, 702, 1023), தெய்வம் மக்களைக் காத்தல் ஒருபுறம் இருக்க தெய்வத்தை மக்களும் காத்தல் வேண்டும் (தென்புலத்தார், தெய்வம்...என்ற ஆங்கு ஐம்புலத்தாறு ஓம்பல்தலை (431); தெய்வம் வான்.உலகத்தில் வாழும் (வான் உறையும் தெய்வம் (50); தெய்வம் தொழத் தக்கது (தெய்வம்தொழாஅள் 1551); தெய்வத்தால் எல்லாம் ஆகும்; அதனால் ஆகாதது எதுவும் இல்லை. (தெய்வத்தான் ஆகாது எனின் (619); ஒருவர் உள்ளத்தில் உள்ளதை உள்ளவாறே உணரவல்லது தெய்வம், "ஐயப்படா அது அகத்தது உணர்வானைத் தெய்வத்தோடு ஒப்பக் கொளல் (702) அந்த வன்மை ஒருவனுக்கு இருக்குமேல் அவன் தெய்வமாகவே மதிக்கப் படுவான்); முயற்சி உடையானுக்குத் தெய்வமும் துணை நிற்கும். - 'குடி செய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம் மடிதற்றுத்தான்முத்துறும்' (1023) என்றெல்லாம் நம்பியிருந்தனர் தமிழர். - திருமால் தன் ஈரடியால், மூவுலகையும் அளத்த திருமாலை "அடியளந்தான் தாஅயது எல்லாம் (610); தாமரைமலர் நிகர் கண்ணுடைய திருமாலை; அவன் வீற்றிருக்கும் உலகை 32.