பக்கம்:வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(தாமரைக் கண்ணான் உலகு (1103); மடி உடுத்திக்காட்சி தரும் திருமாலின் திருக்கோலத்தை; அக்கோலத்தோடு அன்பர்க்கு உதவ விரையும் அவன் நல் உள்ளத்தை (தெய்வம் மடிதற்றுத்தான் முந்துறும் (1023); கண்டு களைத்திருந் தனர் கடைச் சங்க காலத்துத் தமிழ்ப் பெருமக்கள். திருமகள் . - x நல்ல விருந்தினர்களை, அகமும், முகமும் மலா வரவேற்று, அவர் விரும்பும் நல்ல உணவுவகைகளை, அவர் விரும்பும் அளவு வழங்கி வாழ்வான் இல்லத்தில், அகமகிழ்ச்சி யோடு வீற்றிருக்கும் செய்யாளாம் திருமகளை, "அகன்அமர்ந்து செய்யாள் உறையும் முகன்அமர்ந்து நல்விருந்து ஒம்புவான் இல் (84) பிறர்பால் இடங்கொண்டு கிடக்கும், அளவிறந்த பொன், பொருள், புகழ் கண்டு, கண்டு, மனம் பொறாது, பொறாமை கொள்வாள் ஒருவனைத் தன் தமக்கையாம் மூதேவிக்கு அடையாளம் காட்டிச் சென்று அவனைப் பற்றிக் கொள்ளப்பணித்து விட்டு, தா ன் ஒதுங்கிக் கொள்ளும் செய்யவளாம் திருமகளை, - . . . . . 'அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள் தவ்வைக்குக் காட்டி விடும் (167) மடி, அதாவது சோம்பல் என்பதையே அறியாது, எப்போதும் உழைத்துக் கொண்டே இருக்கும் ஒருவன் கால்கள், தான் வீற்றிருக்கும் தாமரை மலரினும் சிறந்தது எனக்கண்டு, தாமரை மலரின் நீங்கி, உழைப்பவன், தாளில் போய் அமர்ந்திருக்கும் திருமகளை (மடியிலான் தாள் உளாள் தாமரை யி னாள் (617) ), அறமாவது யாது, அறமல்லாதது யாது என்ற தெளிந்த அறிவுடையராக, தாம் -3- 33