பக்கம்:வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளை, இலை, பூ, காய், கனி ஆகிய அ ைன த் து உறுப்பாலும், மக்கள் நோயைப் போக்கவல்லதும், அணுக இயலா இடத்திலோ; பி. ற ர் க் கு எளிதில் புலப்படா மறைவிடத்திலோ, ஒருபருவத்தே தளிர்த்து, ஒருபருவத்தே வற்றிப்போதலோ இல்லாமல், வேண்டுவார்க்கு வேண்டும் போதெல்லாம் கிடைக்கவல்லதுமாகிய மருந்து மரம். 'மருந்தாகித் தப்பா மரத்து அற்றால் செல்வம் பெருந்தகையான் கண்படின்' (217) என்பது குறள் முள் மரம்: முள் மரந்தான்; ஆனால் இளைய மரம்; இதனால் நமக் கென்ன கேடுவந்துறப்போகுது? இதை ஏன் இப்போதே கிள்ளி எறியவேண்டும்? அதை அப்படியே விட்டுவிட்டால், அதுசில ஆண்டுகளில், நன்கு வளர்ந்துவிடும். அவ்வாறு வளர்ந்துவிட்ட நிலையில் அதை வேரோடு களைவதும் கடினம்; அதுமட்டும் அன்று: களையச்செல்லும் தன்னைத் தன்கூரிய முள்களால் குத்திக் குருதிபெருகச் செய்துவிடும். முள்மரத்தின் இயல்பு. - . . . . இவ்வியல்பை உணர்ந்த வள்ளுவர், அதைப்பயன் படுத்தற்காம் நல்ல இடத்தையும், நல்ல காலத்தையும் எதிர் நோக்கி இருந்தார். கிடைத்துவிட்டது அந்த வாய்ப்பு. பேரரசன் ஒருவன்; அவனுக்குப் பகைஉண்டு; ஆனால் அப்பகையோ, அத்துணைப் பெரிது. அன்று. ஆகவே அதை அழிக்க வேண்டியது, அப்போதைய தேவை இல்லை என எண்ணி, வாளா இருந்து விட்டான். ஆண்டு சில கடந்தன அச்சிறுபகை, ஆற்றல்மிகு பெரும்படையாய் அவனையே அழித்து விட்டது. - গু৫৭rলী அழித்துவிட்டான் இனி உலகில் உள்ளவ ரெல்லாம், அவன் வழியைப் பின்பற்றக்கூடாதே; சிறு 59 .