பக்கம்:வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகையை வளரவிடக்கூடாதே என உலகத்தவர்க்கு உணர்த்த விரும்பிய வள்ளுவர்க்கு, உதவியது அம்முள்மரம், "இளைதாக முள்மரம் கொல்க களையுநர் கைகொல்லும் காழ்த்த இடத்து” இது அக்குறள் (879). வற்றல்மரம்: நிலமோ, நீர்வளம் காணாதப் பாலைவனம்; அப்பாலையில், உள்ள பசுமரமே நாள்.ஆக, நாள்ஆக வற்றிவிடும்: அங்ங்னமாகவும், அப்பாலையில் வற்றிப்போன ஒரு மரம் தளிர் விடல் இயலுமோ? இயலாது! பாலையில் அற்று விழப்போகும் அந்த வற்றல்மரத்தையும் வள்ளுவர் மறக்கவில்லை. உயிர், உடலோடு கூடிவாழ்வதே. உலகில் உள்ளார் ஒவ்வொருவரிடத்தும் அன்பு காட்டுவதற்கே. "அன்போடு இயைந்த வழக்குஎன்ப ஆருயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு' (குறள்-72) அத்தகைய அன்பு, ஒருவரிடத்தில் இல்லையாயின் அவர் வாழ்க்கை வளம்குன்றி, வற்றிவிடும்; அதாவது இல்லாகி விடும்: இந்த உண்மையை விளக்கவே வள்ளுவர்க்கு, வற்றல் மரம் கைகொடுத்து உதவியது. 'அன்பகத்துஇல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்க்கண் வற்றல்மரம் தளிர்த் தற்று' (குறள்-78) மலர்கள் மரஇனத்தின் ஒருபகுதியே மலர் என்றாலும், வள்ளுவர் மலர்கள் சிலவற்றை எடுத்தோதி உள்ளமையால்' மரவினத்தை அடுத்து மலர்கள் கூறப்பட்டுள்ளன. 60