பக்கம்:வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீர்மலர்: தாமரைபோலும் நீர் மலர்கள், எப்போதும் நீரின் மேலேயே இருக்கும் வண்ணம், அவற்றின் தண்டு, நீரின் மட்டம் உயரஉயரத் தானும் நீண்டுகொண்டே இருக்கும். நீர்மட்டம் எவ்வளவு உயருமோ, அந்த அளவு நீண்டுவிடும் தண்டு. நீர்மலர்த்தண்டின் இவ்வியல்பை, ஒருவன் உள்ளம், எப்போதும் உ ய ர் வ | ன ஒன்றையே உள்ளவேண்டும். அவன் உள்ள உணர்வு எவ்வளவு உயர்வான பொருளை உள்ளுகிறதோ, அந்த அளவு அவன் நிலையும் உயர்ந்து விடும் என்ற உண்மையை விளக்க ஆண்டுள்ளார். 'வெள்ளத்து அனைய மலர்நீட்டம்; மாந்தர்தம் உள்ளத்து அனையது உயர்வு’’ (குறள்-595) நாறாமலர் : கண்ணைக் க வரு ம் வண்ணமலர்கள் கொத்துக் கொத்தாக மலர்ந்திருப்பதை, இன்றைய பூஞ்சோலைகளில் காணுகின்றோம். ஆனால் அவற்றிற்கு மணம் சிறிதும் இல்லை. அதனால் அவை க ண் ணு க் குத் தா ன் விருந்தளிக்குமேயல்லது மணத்தால் மகிழ்ச்சி அளிக்கா. அத்தகைய மலர்கள் வள்ளுவர் காலத்திலும் இருந்தன போலும். அத்தகு மலர்களை, உலகத்து உள்ள நூல்களை யெல்லாம் தேடிப்பெற்றுப் படித்திருந்தும், படித்து உணர்த்த பொருளை, நல்லோர்கூடிய அவையில், அவர் உணர்ந்து கொள்ளுமாறு கூறமாட்டாராயின், அவ்வாறு கூறமாட்டா அவர் கற்ற பெருங்கல்விக்கு உவமையாகப் பயன் கொண்டுள்ளார் வள்ளுவர். “இணர்ஊழ்த்தும் நாறா மலரனையர் கற்றது உணர விரித்து உரையாதார்’ (குறள்-650) 61