பக்கம்:வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. வள்ளுவர் வகுத்த மருத்துவம் உயிருக்கும் உடலுக்கும் உள்ள உறவு, பறவைக்கும், அது கட்டி வாழ்ந்திருந்த கூட்டிற்கும் உள்ள உறவு போன்றதே. என்றேனும் ஒரு நாள், அப்பறவை தான் வாழ்ந்திருந்த கூட்டைத் தனித்துப் பயனற்றுப்போக விட்டு விட்டுப் பறந்து போய்விடுதல்போல், உயிர் என்றேனும் ஒரு நாள், தான் அதுசாரும் இடம் கொண்டிருந்த உடலைத், தனித்துப் பயனற்று அழிந்துபோக விட்டுவிட்டு போய்விடும். 'குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே உடம்பொடு உயிரிடை நட்பு" (338) ஆகவே, நேற்று நன்கு வாழ்ந்திருந்த ஒருவன் இன்று இல்லை என்ற பெருமைக்கு உரியது இவ்வுலகம். 'நெருநல் உளன்ஒருவன் இன்று இல்லை என்னும் பெருமை உடைத்துஇவ் வுலகு” - (336) எ ன் .ெ ற ல் லாம் கூறி நிலையாமையின் கொடுமையை எடுத்துக் கூறியவர்தாம் திருவள்ளுவர். எனினும், இறும் உயிர்க்கும் ஆயுள் மருந்து ஒழுக்கல் தீது அன்றால், அல்லள போல் ஆவனவும் சில'" என்பதையும் அளித்தவர் அவர். ஆகவே, அழிந்துபோகும் அவ்வுடலையும், மேலும் சில காலம் அழித்துபோகவிடிாது கா க் கவ ல் ல வழிமுறைகளையும் வகுத்துத் தந்துள்ளார். நோய்க்காம் காரணங்களைக் கண்டறிந்தால் அல்லது நோய்தீர்க்கும் மருந்து அம்மருந்தினை அளிக்கும்முறை போல்வனவற்றை அறிதல் இயலாது ஆகவே, நோய்க் காரணங்களுள் தலையாய சிலவற்றை முதற்கண் கூறி யுள்ளார் வள்ளுவர். 79