பக்கம்:வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடல் அழியாதிருக்க உறுதுணை புரிவன, அவ்வுடலுள் அடங்கி இருக்கும் காற்று, பித்தநீர், கபம் எனப்படும் சளி என்ற இம் மூன்றும். இ ைவ இருக்கவேண்டுவதுதான் ஆனால் அவையும் அளவோடு இருக்கவேண்டும். ஏதேனும் ஒன்று இருக்கவேண்டிய அளவுக்குக் மிகுதியாகவோ, குறை வாகவோ இருந்துவிட்டால், நோய்கள் வந்து குடிகொண்டு விடும், ஆகவே, அந்த மூன்றும் அளவோடு இருக்கப் பார்த்துக்கொள்ள வேண்டும். "மிகினும் குறையினும் நோய்செய்யும்; நூலோர் வளிமுதலா எண்ணிய மூன்று' - (941) வளிமுதலா எண்ணிய அம்முன்றையும் அளவோடு வைத்திருப்பது எவ்வாறு? 75ಣTTEು அவை அளவில் மாறுபடுகின்றன: இந்தக் காரணத்தையும் கண்டறிந்து அறிவித்துள்ளார். தன் உடல்நலத்தோடு இருக்க எவ்வளவு குறைந்த உணவை உட்கொள்ள வேண்டும் என்பதை அறிந்து அந்த அளவு உணவையே உண்பவன் நோய் இன்றி இன்புற்று வாழ்வான். ஆனால் உடல்நலத்துக்கு ஏற்ற அளவு அறியாது. நனிமிகப் பெரிய அளவிலான உணவுப் பொருட்களை உண்ணுவனாயின் அவன் உடல் உள்ள நோய் களுக்கெல்லாம் உறைவிடமாய் அமைந்து அவனுக்கு. நீக்கலகாச் கொடுந்துன்பத்லிதத்தரும். ஆகவே. நோய்க்கு மூலகாரணம் பெருந்தீனி. - "இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் - நிற்கும் கழிபேர் இரையான்கண் நோய்' (946) 80