II2 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா
அந்தப் புலன்கள் ஐந்தும் ஊறு, சுவை, ஒளி, நாற்றம், ஓசை என்ற ஐம்பெருங் காரியங்களை ஆற்றி வருகின்றன.
இந்த உலக வாழ்க்கையை உணர, உய்த்துச் சுவைக்க, அனுபவிக்க, ஆனந்தம் பெற, ஐம்புலன்கள் தான் அதிகமாகப் பயன் படுகின்றன.
இந்தப் புலன்களை ஒருவர் அடக்கி விட்டால், அவர் அற்புதமானவர். இவைகளுக்கு அவர் அடங்கா விட்டால், நெறிகள் மாறி வீழ்வர்.
இதனால்தான், ஒவ்வொரு மனிதரும் ஐம் புலன் ஆட்சியினை விடல் வேண்டும். வெற்றி கொள்ள வேண்டும் (அடல் வேண்டும் ) என்ற ஒரு குறளையும் பாடியுள்ளார்.
“அடல் வேண்டும் ஐந்தன் புலத்தை விடல் வேண்டும்
வேண்டிய எல்லாம் ஒருங்கு’’ (343)
இப்புலன்களின் பேராற்றலை, அடக்கி, வென்று ஒரு சேர விட்டு விட வேண்டும் என்பது மனிதர்களின் ஆசைதான். ஆனால் அப்படி முடிகிறதா என்ன?
சிந் தை தெளிந்த சித் தர்களும் . இந்த ஐம் புலன்களிடம் சிக் கிக் கொண்டு பாடு பட் டு, பங்கப்பட்டு, வதைப்பட்டு, சிதைப்புற்று, வழிமாறித் தவித்ததை எல்லாம், புலம் பித் தானே பாடிச் சென்றிருக்கின்றனர்.
இந்த ஐந்து நல்ல புலன்களை எல்லாம், அவர்கள் கள்ளப்புலன்கள் என்றல்லவா கதறிக் கதறிப் பாடிச் சென்றிருக்கின்றனர்.