வள்ளுவர் வணங்கிய கடவுள் II9
நுகர்ச்சியால் , பின் செல் பவர்கள், தன்னை இழப்பதுடன், தன் பெருமையையும் இழந்து போகின்றார்கள் யோசிக்காமல்.
இவ் வளவு விளக்கம் எதற்காக என்றால், பொறிகள் என்பது, அளவற்ற ஆற்றல் களைக் கொண்டிருக்கின்றன என் பதைக் குறித்துக் காட்டத்தான்.
இத்தகைய ஐம் புலன்களைத் தான் விடல் வேண்டும்; அடல் வேண்டும் என்கிறார்கள். அவ்வாறு விட் டவரைத் தான் அவர் துறவினை மேற் கொண்டிருக்கிறார். புலன்களைப் புறம் கண்டிருக்கிறார் என்று கூற முடியும்.
இனி, நாம் பாடலின் பொருளுக்கு வருவோம்.
‘பொறிவாயில் ஐந்தவித்தான் பொப் தீர் ஒழுக்க
நெறி நின்றார் நீடுவாழ்வார் ’’
என்ற, குறளுக்கு அப்படியே பதம் பிரித்து, பொருள் தந்தார்கள் பல உரையாசிரியர்களும்.
நான் பதம் பிரித்த விதத்தை இனி இங்கே காண்போம்.
ஐந்து பொறி/வாயில் /அவித்தான்/பொய்/ தீர்/ ஒழுக்கநெறி/நின்றார்/நீடுவாழ்வார்/
என்று பிரித்திருக்கிறேன்.
இக் குறளில் ஒள்ள ஒவ்வொரு சொல்லும் , எவ்வளவு கருத்துடன் சொல்லப்பட்டிருக்கிறது என்ற அழகை, தொடர்ந்து அறிந்து இன்புறுவோம்.