I2O டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா
ஒன்பது வாயில் கொள் கோட்டையுண்டே-அதில் உள்ளே நிலைக்காரர் அஞ்சு பேராம்
(கொங்கண நாயனார்)
இந்த அஞ்சு பேரும் அச்சத்தை விளைவிக்கும் ஆற்றலும் , எப்படிப் பட் டவர்களையும் ஆட் டிப் படைக் கும் வேகமும் கொண்டவர்களாவார்கள்.
அதனால்தான் பட்டினத்தாரும்,
o - - - - - > ஐவர் கலகமிட்டு அலைக்கும் கானகம்
என்று பாடினார்
‘ஐம் பொறி ஆடகம்
என்று திருமூலர் பாடுகிறார். (2131) ஆடகம் என்றால் உடம்பு என்று அர்த்தம்..
பொறி என்றால் புலன் என்றுபொருள். ஐம்பொறி என்றால் ஐந்து புலன்கள் என்று அர்த்தம்.
இங்கே பொறி என்றால் தீப் பொறி என்று கொள்ள வேண்டும். ஐந்து பொறிகளும் ஆற்றல் மிக்கத் தீப்பொறிகள்.
அவித்தான் என்றால் அடக்கக் கூடியவன் என்று கூறாமல், தீயை அணைத்தவன் என்பது அர்த்தம்.
அவித்தல் என்ற சொல்லுக்கு, அணைத்தல் , அழித்தல், துடைத்தல், நீக்குதல் என்று அர்த்தம்.
தீயை அடக்கி விட்டால், மீண்டும் தலை தூக்கி
எழும். அதனால் தான் நீறு பூத்த நெருப்பு என்று சொல்வார்கள்.