உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் வணங்கிய கடவுள்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வணங்கிய கடவுள் 129

10. கவலையை மாற்றும்


‘தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்

மனக்கவலை மாற்றல் அரிது ‘ (7)

ஒருவாற் றானும் தனக்கு நிகரில் லாதவனது தாளை சேர்ந்தார்க்கல்லது, மனத்தின் கண் நிகழும் துன்பங்களை நீக்குதல் உண்டாகாது என்று பரிமேழகர் உரை கூறுகின்றார்.

தமக்கு ஒப்புவமையாக எவரும் இல்லை என போற்றப்படும் அறிவாற்றலிற் சிறந்த சான்றோரின் அறிவுரைகளைப் பின் பற்றுபவர்க்கு மட்டுமல்லாமல் மற்றவர்க்கு, அவர் தம் மனத்தின் கண் தோன்றும் கவலைகளை மாற்றுவது என்பது இயலாத ஒரு செயலாகும் என்று மற்றவர்கள் உரை கூறுகின்றது.

கடவுள் வாழ்த்து என்ற அதிகாரத்தில், கடவுள் என்ற சொல் எங்குமே எழுதப்படவில்லை.

கடவுள் வாழ்த்து என்ற பாயிரத்தில் , எழுதப்