130 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா
பட்டதினாலேயே, பொருள் கூறவந்த பெரியவர்கள், எல்லோரும் இறைவன் என்றே, எல் லா பாடல்களுக்கும் , அர்த்தத் தைத் திணித்து, அரும் பொருள் எழுதினார்கள்.
எல் லா பாடல்களுக்கும் , இறைவன் என்று பொருள் கூறியவர்கள், இந்தப் பாடலில் தனக்கு நிகரில்லாதவனது தாள் என்று தான் பொருள் கூறி யிருக்கின்றார்கள்.
உலகைப் படைத்தவன் பரம் பொருள் என்றும், பிரம் மம் என்றும் , பரம பிதா என்றும் , அவரவர் மதத்தின் கொள்கைக் கு ஏற்ப நமக்கு அறிவுறுத் தினார்கள்.
அவர்கள் கூற்றை நான் மறுக்கவோ, மாற்றவோ,
எதிர்த்து எழுதவோ, இந்தப் பகுதியை நான் பயன்படுத்திக் கொள்ளவில்லை.
மனிதர்களிலே மேம்பட்ட ஞானத்தையும் , மேன்மை மிகுந்த வாழ்வையும் கொண்டு, மனித குல வழிகாட்டியாக விளங்கும் மோன குருவைத் தான், கடவுள் என்று இங்கே வள்ளுவர் குறித் திருக்கிறார் என்றுதான் எனது கருத்தாக இருக்கிறது.
அதற்காக, நான் கடவுளுக்கு எதிரி என்றோ, கடைந்தெடுத்த நாத்திகன் என்றோ, நீங்கள் நினைத்து விட வேண்டாம். கடவுள் என்று, அந்த உயர்ந்த நிலையில் வைத்து வணங்கப் படுகிற மனித இனத்துடன் ஒருவராக, ஒன்றி வாழ்கிற குருதேவரை வழிகாட்டியாகக் கொள்ளுங்கள். வாழ்வு வளம் பெறும் . ஒளிபெறும் வதைக் கின்ற நோய்களும், எரிக்கின்ற கவலைகளும் உங்களை அணுகாது,