உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் வணங்கிய கடவுள்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

வருகின்ற குருவால் தான் கொடுக்க முடியும். கற்பிக்க முடியும்.

அதனால் தான், தனக்கு உவமை என்று யாரும் இல்லாத, நிகரில் லாமல் வாழ்கின்ற குருவின் அரிய ஞானத்தைப் பெற, அவருடன் சேர்ந்து விட்டால், மனக்கவலைகளை மாற்றிவிட முடியும். -

அவ்வாறு அரிய குருவின் திருவடிகளை சேர்ந்து வாழ இயலாதவர்களுக்கு, எந்த நாளும் மனக் கலலையை மாற்றவே முடியாது என்கிறார் வள்ளுவர்.

அல் என்றால் இருள் என்றும் , ஆல் என்றால் நஞ்சு என்றும் பொருள் உண்டு.

இந்த மனக் கவலை என்பது மனித குலத்தை இருள் மயமாக்கக் கூடிய ஆற்றலும், நச்சுத்தன்மையை விளைவிக்கும் வேகமும் கொண்டது என்பதால், அல் ஆல் மனக் கவலை என்றும் நாம் பிரித்துப் பார்க்கிறோம்.

ஆகவே, குருவின் திருவடி, மனித குலத் தைக் காக்கிறது. வளமான வாழ்வுக்கு வழி காட்டுகிறது. அந்த அற் புத வாழ் வின் ஒளியை அடைய, ஆழ்ந்த வைராக்யத்தையும் வளர்த்து விடுகிறது.

குருவின் நெறியே, கொழிக் கும் ஞானமே, பின்பற்றுபவர்களின் பெரும் பாக்கியமாக இருக்கிறது என்பதால், உள்ளத் தை நெறிப் படுத்தும் குருவின் ஞான போதனைகளைக் கொண்டு, ஞான தீபத்தை ஏற்றி வைத்து, ஞாலத்தில் ஒளிமயமான வாழ்வு பெற்றுக் கொள்க என்பதையே இந்தக் குறளில் , வள்ளுவர் வலியுறுத்தி வழி நடத்துகின்றார்.