I68 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா
மாட் டாமல் , இடையிலேயே அழிந்து போய் விடுவார்கள். ஆனால் , பின்பற்றி நடப்பவர்கள், கடந்து கரையேறுவார்கள்.
மற்றும் பல உரையெழுத வந்த ஆசிரியர்கள், பரிமேலழகர் உரையைப் பின்பற்றி, அவர் கருத்தினை, எளிமையான சொற்கள் மூலமாக, சுருக்கிச் சொன்னார்கள். அதாவது.
கடவுளின் திருவடிகளை அடைந்தவர், பிறவியாகிய பெரிய கடலைக் கடப் பார். அடையாதவர், அதனைக் கடக்க மாட்டார்.
பிறவிப் பெருங்கடல் இறைவன் அடி சேராதார் நீந்தார். நீந்துவர் சேர்ந்தார் என்று எனது பகுப்பு முறை தொடர்கிறது.
பெருமைக்குரிய பத்தாவது பாடலாக இருக்கிற இந்தக் குறளின் ஆழமான கருத்துக்களை, ஒவ்வொரு சொல் லாகப் பதம் பிரித்து பொருள் காணுகிற போதுதான் புரிகிறது.
பெரு நாவலர், முதற்பாவலர், தெய்வப் புலவர் என்றெல்லாம் பலராலும் வாயாரப் போற்றப் படுகிறார் வள்ளுவர் என்றால், அவர் தந்த குறளில், பல் சுவைக் கருத்துக்கள் பண்பாடிக் கொண்டிருப்பதால்தான். - o
எட்டாவது குறளிலும் பத்தாவது குறளிலும் இரண்டு சொற்கள் திரும்பத் திரும்ப வந்திருக்கின்றன.
- F Ro% 6 ஆழி, நீந்துதல்,
10வது ** பெருங்கடல் *- நீந்துதல்.