வள்ளுவர் வணங்கிய கடவுள் 199
குருவிடம் உள்ள அரும் பண்புகளை அடியொற்றி வாழ்ந்து கற்றுத் தெளிவது; அவரைப் போலவே ஐம் பொறிகளையும் அடக்குகின்ற ஆற்றலைப் பெறுவது. அகத்துக் குள்ளே அலை பாய்ந்து கிடக்கும் கவலைகளை மாற்றிவிடுவது, அவரோடு கூடவே மற்ற மனிதர்கள் போல அமிழ்ந்து போகாமல், நீண்ட வாழ்க் கைக் கடல் நீச்சலையும் தளராமல் செய்து, வெற்றி பெறுவது என்பதையெல்லாம் சொல்லுவது - மனித சக்தியை அநித சக்தியாக மாற்றிட கூறும் , மணியான மார்க்கம் என்பதால்தான், முதலில் மனித குலத்திற்கு வழி காட்ட வேண்டும் என்று, மோன குருதேவர்களைப் புகழ் வதன் மூலம், புற இருளை நீக்குகின்ற சூரியன் போல, அக இருளை நீக்குகின்ற வாலறிவன்களிடம் மனிதர்களை ஆற்றுப் படுத்துகின்றார்.
துணையில்லாத பயணம் துன்பம் தரும். வழிதெரியாத முயற்சி தோல் வி பெறும் . ஞானமில்லாத வாழ்வு வீணாய் விடும்.
அதற்காகவே, புற இருளைப் போக்கும் சூரியனைப் போல, அக இருளைப் போக் கும் சூரியனாக, குருவைக் காட் டுகின்றார். அதன் தெளிவுதான், சூரிய வணக்கம் என்று வாழ்த்துப் பாடியதாகும்.
இறுதியாக ஒன்று.
அகர முதல எழுத் தெல்லாம் என்ற வரியில், அளிக்கப்பட்ட கருத்து. அகரமானது, எல்லா மொழிகளிலும் உள்ள முதல் எழுத்து. அடிப்படை எழுத்து. அந்த அகரமானது, எழுத்தாகி, ஒலியாகி வருகிறபோது, ஏற்படுகிற எல்லா எழுத்துக்களிலும்