பக்கம்:வள்ளுவர் வணங்கிய கடவுள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

அதற்கு எதிர்ப்பதமாக இருப்பது அமர்.

அமர் என்றால் மரணமில்லாதது. ஆமாம், மரணமில்லாப் பெருவாழ்வு என்பதைத்தான் அமரர் என்ற சொல், சுகமாகச் சொல்கிறது.

அவன் இறந்து போனான். ஆனாலும் வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்று பேசுவது இப் படி யாகத்தான்.

ஆக, அமரர் என்றால் இதுதான் உண்மையான அர்த்தம். உயிர் வாழும் காலத்திலேயே, உண்மை யாகவே பல பெரிய காரியங்களைச் செய்து, பெருமையோடு மக்கள் மனதிலே அமர்ந்திருப்பவர் என்பது தான்.

இப்படி மக்கள் போற்றி, தங்கள் மனக் கோயில் களில் பீடம் அமைத்து போற்றிப் புகழ் கின்ற அமரத் தன்மைக்கு மேலான வருகிற ஏழாம் நிலைதான். தேவர்கள் என்பதாகும்.

7. (குரு) தேவர்கள் என்றால் வானவர்கள் அல்லர். மேலோர்கள் என்று அழைக்கப்படுபவர்கள். முற்றுந் துறந்த முனிவர்களிலே பற்றற்ற தன்மையால், புலன்களை வென்று, எவரும் இணையென்று சொல்ல முடியாத இறைத்தன்மையைப் பெற்றவர்கள்.

தவத்தாற்றல் மிக்க துறவியர் பலருக்கு, பெயரின் பின்னால் வழங்குகின்ற சிறப்புப் பெயராக தேவர் என்ற பெயர் அமைந்திருந்தது. பல உதாரணங்களால் இதை நாம் அறியலாம். சீவக சிந்தாமணி என்ற காப்பியத்தை இயற்றிய சைவ முனிவர் திருத்தக்கர். அவருக்குத் திருத்தக்கத் தேவர் என்பதும் ,