வள்ளுவர் வணங்கிய கடவுள் J3
கடவுள் வாழ்த்து என்பதை, நாம் பொருள் அறிகிற போது, கடவுள் என்ற சொல்தான், நமக்கு வழிகாட்டி நிற்கிறது.
கடவுள் வாழ்த்து என்றால் தேவதுதி என்று அர்த்தம்.
கட+உள் என்று இந்தச் சொல் லைப் பிரிப்பார்கள். உள்ளும் புறமும் கடந்து நிற்பது என்று இதற்குப் பொருள்.
கடவுள் என்றால் , குரு, முனிவன், மேனர் மை யானவன், உள்வழி கடந்தோன், எண்குணத் தோன், ஐம் புலத்து அடங் கான். முக் குற்றம் கடிந் தோன், தெய்வம், வானவன் இறைவன் என்றெல்லாம் பொருள்கள் உண்டு.
அதே போல, குரு என்றாலும், இறைவன், ஈசன், ஐயன், தலைவன், கோமான், ஞானாசிரியன் என்றும் பல பொருட்கள் உண்டு.
தங்களுக்குத் தலைமையாக, தங்களுடனே வாழ்ந்து விளங்கும், குருவினைப் போற்றிப் புகழ்ந்து, திருவடி பணிந்து, அடியொற்றி வாழ்ந்திட வேண்டும் என்பதற்காகத்தான், குரு வணக்கம் என்று கூறாமல் மக்களின் மனதிலே பதிய வேண்டும் என்பதற்காக, கடவுள் வாழ்த்து என்று திருவள்ளுவர் பாடிவைத் திருக்கிறார். தனது கருத்தை ஒட விட்டிருக்கிறார்.