முன்னுரை
“அவனே புலவன் அவனே கவிஞன்
அவனே தமிழை அறிவோன்’
என்று வள்ளுவரை வானளாவப் புகழ்ந்து பாடி மகிழ்ந்த ஒரு புலவனைப் போல, குறள் பாக்களைப் படிக்கும் போதெல்லாம், என் மனதுக்குள் ஏராளமான எண்ணங்கள்
குலுங்கிக் கொண்டேயிருக்கும்.
பரிமேலழகர் உரை நூலைப் படிக்கும் போது, பதிப்புரைப் பகுதியில் வரையப்பட்ட ஒரு சில வரிகள், என் எண்ண ஓட்டங்களுக்கு மேலும் விரைவைக் கொடுத்தது.
‘யாதாமொரு குறட்பாவுக்குப் பரிமேலழகர் எழுதிய உரை பொருத்தம் உடையது அன்று என்று ஆராய்ச்சியாளர்களின் அறிவிற்குப் புலப்பட்டால், அவ்வுரை எவ்வாறு பொருத்தமில்லை என்று, தக்க காரணங்காட்டி தமது கருத்தை அறிவிப்பதே உண்மையை அறியும் முறைமையாம். பரிமேலழகர் உரையை மறுக்கக் கூடாதென்று பிடிவாதமாய் கொள்ளும் கொள்கையானது மாண்புடைத்து அன்று என்று சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தாரின் பதிப்புரையைப் படித்ததும்,
பரிமேலழகர் 2_ J பொருத்தமானதல்ல என்றுசொல்லவோ, திருத்துதற்கு தகுதியாளன் நான் என்று முன்வரவோ இல்லை. என்னை சிந்திக்க்த் தூண்டியதன் விளைவே, இந்த நூலை எழுத வைத்தது.
வல்லமையால் சொல்லுக்குள் சொல்லை வைத்தே வள்ளுவனும் மர்மத்தின் மர்மம் சொன்னான்.
வல்லமையுடன் ஒரு சொல்லை சொல்லி விடலாம். அது