உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் வணங்கிய கடவுள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எளிது. ஆனால் சொல்லுக்குள்ளே பல சொற்களை வைக்கின்ற திறமை. ஒரே சொல்லின் உட்பொருளாக, ஆழ் பொருளாக, அடுக்கடுக்காக அர்த்தங்கள் வெளியாகும் படி சொல்லிய சொற்கள், வள்ளுவருக்கே உரிய மாண்புகள் ஆகும்.

அப்படிப்பட்ட சொற்கள் எல்லாம் வாழ்க்கையின் அதிசயத்தை மட்டுமல்ல, அற்புதங்களையும் வடித்துக் காட்டின.

அதற்கும் ஒரு படி மேலே சென்று வாழ்க்கையின் மர்மங்களை, முடிச்சிட்டுக் கிடக்கின்ற முரண்பாடுகளின் சூட்சமங்களையெல்லாம், உள்ளங்கை நெல்லிக்கனி போல வெளிப்படுத்தினான் என்கிற அந்த இரண்டு வரிகள் தான், என்னை மேலும் மேலும் சிந்திக்கத் தூண்டின.

உரையாசிரியர்கள் கூறிய கருத்துக்கள் எல்லாம் அந்தந்த கால வாழ்க்கை முறைக்கேற்ப, எழுதப்பட்டது என்று நான் கருதியதால், தமிழ்ச் சமுதாயத்தின் இன்றைய சூழ்நிலைகளை கருத்திற் கொண்டு என் உரை வெளியாகியிருக்கிறது.

வள்ளுவர் வணங்கிய கடவுள் என்று இந்த நூலுக்கு தலைப்பைத் தந்திருக்கிறேன்.

வள்ளுவர் எங்கள் மதத்தைச் சார்ந்தவர் என்பதற்காக, குறட்பாக்களையே வளைத்து இழுத்துப் போட்டு, விளக்கம் தந்து, அவரை எல்லா மதத்திற்கும் சொந்தக்காரர் என்று இழுத்துச் சென்ற உரையாசிரியர்கள் ஏராளம். *

கிறித்தவர், சமணர், புத்தர், இந்து என்றல்ெலாம், அவரது மதம் பற்றி பேசப்பட்டாலும், அவர் வணங்கிய கடவுள் பற்றி யாரும் கூறவில்லை. காரணம், அவர் சார்ந்திருக்கும் மதம் பற்றிக் கூறிய உடனேயே, அவர் வணங்கிய கடவுள் பெயரும் கூடவே வந்து விடுதகிறதல்லவா!

திருக்குறளில், முதல் அதிகாரமே கடவுள் வாழ்த்து.

வள்ளுவர் கடவுள் வாழ்த்து என்று பாடவே இல்லை.