பக்கம்:வள்ளுவர் வணங்கிய கடவுள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வணங்கிய கடவுள் 63

வாழ் வும் வாழச் செய்ய வேண்டும் என்ற வேட்கையுடன் பக்குவப் படுத்துவது போல, பதமாக கடவுள் வாழ்த்தினைப் பாடி யுள்ளார்.

ஒளிமிகுந்த பகவன் முதலாக உலகு தோன்றியது. உலகத்தில் மக்கள் முதலாக இருந்தனர். அறிஞர்கள் நிறைந்திருந்தனர். அவர்கள் வாயைத் திறந்த போது, அகர ஒலி எழுந்தது. அகர ஒலிக் குப் பிறகு, அகர எழுத்துப் பிறந்தது. எழுத்து சொற்களாயின. சொற்கள் பொருளாயின. பொருள் யாப் பாயின. தளையாயின. இலக் கியம் ஆயின. இலக்கணம் ஆயின. மறை, வேதம், சுருதி என்று தொடர்ந்தன.

இப் படி சூரியன் முதற் றே, உயிரினங்களும் மக்களும் , தாவரங்களும் சொற்களும் என எல்லாம் உண்டாயிற்று என்று முதல் குறளில் , தான் கொண்ட கொள்கையை மறை பொருளாக விளக்கியிருக்கிறார்.

நம் மையும் பயப்படுத் தி, பதப்படுத் தி, இதப்படுத்தி, சுகப்படுத்தி, சொர்க்க வாழ்வை அளிக்க இருக்கும் பாடல் களை, இனி ஒவ்வொன்றாகத் தொடர்ந்து காண்போம்.