பக்கம்:வள்ளுவர் வணங்கிய கடவுள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

68

அறிய மாட்டாதவர்கள், எல்லோரும் அறிவில் லாதவர்கள். அதாவது கல்லாதவர்கள் என்று

கற்றவர்க்கும் கல்லாதவர்க்கும் பேதம் பிரித்துக் காட்டியிருக்கிறார். .

. ஆகவே, தமக்குப் பின்னாளில் என்ன நேரும் என்று முன்னரே உணர முடியாத கல்லாதவர்களும், கடவுள் பக்தி உள்ளவர்களாக அன்றும் இன்றும் இருந்திருக்கின்றார்கள். இதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

அதனால்தான், கற்றவர்கள், தங்கள் எதிர்காலத்தை எப்படி ஏற்றுக் கொள்ள வேண்டும்; மாற்றி அமைத்துக் கொண்டு முன்னேற வேண்டும் என்று விரும் பியே, தங்களுக்கு மேலான பேரறிவாளரைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிறார் வள்ளுவர். அப்படி தெரிந்து கொள்வது தான், கற்றதனால் பெற்ற பயன், அறிவு என்கிறார் வள்ளுவர்.

கற்றதனால் ஆய பயன் என்பது, தன் எதிர் காலத்தை வளமானதாக் கும் வல்லமையுள்ள ஒரு குருவைத் தெரிந்தெடுப்பதுதான். -

நல்ல மாணவனாக குருவைத் தெரிந்து கொள்வதும், அவர் திருவடி தொழுது ஏத்துவதும் தான் கற்ற பயன்களிலும் மற்ற பயன்களைப் பெறும் மார்க்கமாகும். - * :

இப் படி அறிவால் தெளிவும், பொலிவும் கொண்டவர்கள் பற்றி, நான்கு வகையாகப் பிரித்துக் காட்டுவார்கள் அறிஞர்கள்.

1. தொலை தூரத்தில் இருந்தாலும், தீப் பொறி