பக்கம்:வள்ளுவர் வணங்கிய கடவுள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வணங்கிய கடவுள் 67

கரை ஒன்றைக் கட்டி விடுவது போலவே அமைகிறது அந்தப் பாடலின் உரைகள்.

இந்த நாளில் பார்த்தாலும் சரி, எந்த நாளிலும், படிக் காதவர்கள் தாம், பக்தி விஷயங்களில் , பேரளவில் ஈடுபடுகின்றனர். கடவுள் பக்தி, பக்தி விழா கொண்டாட்டம் இவற்றில் மிகுதியாக ஆர்வம் காட்டுகின்றனர். அவர்களை வழிநடத்துவதே கடவுள் பக்திதான்.

ஆகவே, கடவுளை வணங்குதல் அவர் திருவடி தொழுதல் என்பது கற்றவர்க்கும் கல்லாதவர்க்கும் பொதுவான பண்புதான். ஆனால், கற்றவர் யார்? கல்லாதவர் யார் என்று குறளைப் படிப்பவர்களும், உரை எழுதுபவர்களும் , விளக்கம் தருபவர்களும் மயங்கிப் போகின்றார்கள்.

தம் குறள் கருத் தைக் குழப் புவார்கள் என்று திருவள்ளுவர் தெரிந் தேதான், இந்தக் கருத்தை தெளிவாக விளக்க, பல குறள்களை பாடி வைத்திருக்கிறார்.

கற்றவர் யார்? கல்லாதவர் யார்?

வள்ளுவரின் குறள் வழியே சென்று, இதற்குரிய விளக்கம் காண்போம்.

‘அறிவுடையார் ஆவது அறிவார் அறிவிலார்

---

அஃதறி கல்லா தவர் (427)

எதிர்காலத் தில் என்ன நடக் கும் என்று பின் வரக் கூடியதை முன்னமே அறிய வல்லவர்கள் கற்றவர்கள். அதுதான் கற்றதனால் பயன் பெற்ற அறிவு. அப்படி எதிர்காலம் பற்றி முன் கூட் டியே