பக்கம்:வள்ளுவர் வணங்கிய கடவுள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வணங்கிய கடவுள் 73

உலகின் குளிரைப் போக்கி, வெப்பத்தை வழங்குவது.

இப் படி உலக மக்களுக்கு எல்லா வகையிலும் காத்து, உற்றுழி உதவி, உயிர் காக்கும் சூரியனைப்

போல, மண்ணுலகில் வாழும் மக்களுக்கு வாழ்வளித்து வளம் சேர்க்கிற ஆற்றல் குரு என்கிற

நல்லாசான்களுக்கே உண்டு என்பதைத் தான் இரண்டாவது குறளில் பாடுகிறார். - *...”

அறியாமை இருளை மனதில் இருந்து அகற்றுவது, ஆனந்தம் தருகிற ஆன்ம ஒளியை மனதில் பரப்புவது, அறியாமையால் செய்கிற விஷத் தன்மையுள்ள கொடிய செயல்களை மக்கள் செய்யாமல் விரட் டும் வகைகளை போதிப்பது, உடலால் வலிமையும், உணர்வால் வளமும், வாழி வால் எல்லா நலமும் பெற குரு உதவுவதால் தான், வானத்தில் உலாவரும் சூரியன் போல அருகில் உலாவருகிற ஆன்ம குரு இருக்கிறார். - --

அவரது நற்றாள் தொழுது, பயன்களைப் பெறுக என்பதுதான் இரண்டாம் குறளின் இதயக் குரலாக நமக்கு ஒலிக்க வைக்கிறார் ஒல்காப் புகழ் கொண்ட வள்ளுவத் தேவர் அவர்கள். -