உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் வணங்கிய கடவுள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

6. மலரும் மாண்புகள்

‘மலர்மிசை ஏகினான் மாண் அடி சேர்ந்தார் நிலமிசை நீடு வாழ்வார்’ (3)

கடவுள் என்ற சொல் கட+உள் என்று பிரிகிறது. உள் என்றால் உள்ளம் என்றும், உள்ளது என்றும் , அகம் என்றும் பொருள் தருகிறது.

உள்ளத் தை அடக் கும் ஆற்றல் தான், உலகில் அரிய செயல் என்ற உண்மையை, உலகத்தார் அனைவரும் ஒத்துக் கொண்டிருக்கின்றனர். ஆகவே, உள்ளே நிகழ் கிற, விரித்தாடு கின்ற உணர்ச்சிகளை, தவிப் புகளை, ஆசைகளை, வெறிகளை எல்லாம் அடக்கிக் கடந்து வெளிவருகிற வரைத்தான் கடவுள் என்றனர். அவரையே வணங்கி, வழிபட்டனர்.

உலகத்தில் மனிதராகப் பிறந்து, அத்தகைய அரிய ஆற்றலை, வல்லமையை வளர்த்துக் கொண்டு வாழ்ந்து காட் டுகிற, சான்றோராக விளங்குகிற, உயர்ந்தோராகிய குருவையே, இங்கே மலர் மிசை ஏகினான் என்று குறிக்கிறார்.