வள்ளுவர் வணங்கிய கடவுள் 75
மலர் என்றால் மலர்ச்சி என்று பொருள். மலர்ச்சி என்றால் எழுச்சி, களிப்பு என்று பொருள். அறிவுத் தெளிவால் மலர்ச்சி பெற்று, அரிய திறமைகளில் எழுச்சி பெற்று, ஆன்மாவில் இன்பத்தைப் பெருக்கக் கூடிய ஆனந்தத் தை மனதில் நிறைத்துக் கொண்டு, அந்த உயர்ச்சி மிகுந்த உணர்வுடன், மேல்நிலையில் உலா வருகிற குரு என்று இதற்கு பொருள் வருகிறது.
மிசை என்ற சொல்லுக்கு உயர்ச்சி, மேல் , உணர்வு என்பது பொருள்.
துன்பமே உலகம். துயரமே வாழ்வு. வாழ்வதே சாபம். அதைத் தொடர்வதே பாபம் என்று அன்றாடம் அரற்றுவது மனிதப் பண்பு. அவர்களிடையே, உயர்ந்த வாழ்க்கையும் , உன்னதப் பேராற் றலும் கொண்டு, ஆனந்தக் களிப் புமாக வாழ் கிறவர் அற்புதமானவரல்லவா!
அவரிடம் சென்றுதான் அறிவுடைய மக்கள் சேர வேண்டும். அந்த உயர்ந் தோர் வந்து, மக்களை அழைக்கக் கூடாது. வா என்று ஆணையிடக் கூடாது. வருத்தக் கூடாது. வற்புறுத்தக் கூடாது.
விரும்பியவர், தான் பெற்ற வேட்கை யினாலே, தன்இடம் கடந்து, உயர்ந்தோர் இடம் தெரிந்து, அவர் இடம் போய் சரணாகதி போல சேர்ந்து கொள்ள வேண்டும் என்பதால் தான், சேர்ந்தார் என்றார் வள்ளுவர்.
இடர்கள் பல வந்தாலும், தடைகள் பல எதிர் நின்றாலும், தடுமாற்ற மில்லாமல் போய் சேர்வதைத் தான், சேர்ந்தார் என்ற சொல் லால் , அழுத்தந் திருத்தமாகக் கூறுகிறார் வள்ளுவர்.