வள்ளுவர் வணங்கிய கடவுள் 87
விருப்பம் , ஆசை, வேட் கை, வெறி என்று நான்கு நிலைகள் உண்டு.
1. விருப்பம் என்பது பார்த்த ஒரு பொருள் மீது, அது பயன் படாது போனாலும் சரி, பிரியம் வைப்பது. அது தேவையென்றாலும் சரி, தேவையில் லை என்றாலும் சரி, அல்லது அது பயன்படாது என்று தெரிந்தாலும் சரி. அடைய வேண்டும் என்பதற்காக ஏற்படுகிற முதல் அவா நிலை.
இந்த விருப்ப நிலையானது, எதிர்பார்த்தது கிடைத்தால் மகிழ்ச்சி பெறுதல். கிடைக்கா விட்டால்,
சிறிது நேரம் அதற்காக வருந்தி, பிறகு மறந்து போதல்.
இது எல்லோருக்கும், எப்போதும் ஏற்படுகிற சாதாரண நிகழ்ச்சியே. சிறுவர் முதல் பெரியவர் வரை சிந்தையில் ஏற்படுகின்ற சிணுங்கல்கள். சில நிமிடம் கண்சிமிட்டும் சலனங்கள். அவ்வளவு தான் அதற்கு வாழ்வு.
2. ஆசை என்பது, ஏற்பட்ட விருப்பத்தை அடைய வேண்டும், அடைந்தே ஆகவேண்டும் என்று வற்புறுத்துகிற கட்டாய நிலை. ஆசைப் பட்டதை
அடையும் வரை, அன்ன ஆகாரமில்லை. அமைதியான உறக்கமுமில்லை என்று தன்னையும் அலைக் கழித்துக் கொண்டு, சுற்றியிருப்
பவர்களையும், சூறாவளியாக ஆட்டுவிக்கும் தன்மை கொண்டது ஆசை.
3. வேட் கை என்பது ஆசைப் பட்ட ஒன்றை, நியாயவழியில், நீதியான முறையில், நேர்மையாகப் பெற முயலும் அடக்கமான ஆசை. இந்த விவரமான அடிப்படையில் தான், வேட்கையை இலட்சியம் என்றும் கூறுவார்கள்.