உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் வணங்கிய கடவுள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

மண்டலமாக விளங்குவதை நாம் அறிவோம்.

ஐம் பூதங்கள் என்பது, நீர், நெருப்பு, காற்று, நிலம், விசும்பு என்பதையும் நாம் அறிவோம்.

சூரியன் தீப்பிழம்புதானே. நெருப்பிற்குப் பின் நின்று உலா வருவது காற்று.

காற்றிரண்டும் கலந்து (ஹைடிரஜன்+ஆக்சிஜன்) ஒன்றாக மாறுவது நீர். விண்ணில் சூரியனின் தாக்கத்தால் உண்டாகும் முழுமைகள் இவைகள்.

ஆக, ஐம் பூதங்களிலும், முதன்மையாக நின்று விளங் கும் சூரியனே, முதன்மை குருவாக விளங்குகிறார்.

அவனது முகம் பார்த்து, மன்பதைக் குச் சுகமும் சொர்க்கமும் (பேரின் பம்) தருவதற்காகத் தான், மண்ணுலகில், மனித வடிவமாக, வலம் வருகின்ற குருவின் பெருமையைக் கூறி வள்ளுவர், வணக்கம் கூறி பாடுகிறார்.

இந்தப் பாடலை நாம், இப்படிப் பிரிப்போம்.

வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு யாண்டும்

இடும் பை இல

வேண்டுதல் என்றால் என்ன? வேண் டாமை என்றால் என்ன? வேண்டுதல் என்றால் விரும் புதல் என்று பொருள்.

விரும் புதல் என்பது மனித மனத்தின் முதல் நிலை. அப் படியென்றால் மனதின் பல நிலைகள் என்ன?