கடவுள் என்று கூறாமல், தன் கண்முன்னே காட்சியளித்து, நடமாடி, நன்மைகளைக் கூறி, நன்மைகளைச் செய்து, மேன்மை நிலைக்கு உயர்த்தி விடுகிற குருவை தான் வள்ளுவர் வணங்கிப் போற்றியிருக்கிறார்.
இந்தக் கருத்தினைத்தான், கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் பத்துப் பாடல்களைத் தந்து, படிப்போரின் ஞானத்தை செம்மை படுத்திக் காட்டுகிறார்.
எப்படி அவர் வல்லமையுடன் சொல்லுக்குள் சொல்லை வைத்து, வாழ்க்கை மர்மத்தின் மர்மத்தை எப்படி விளக்கினார் என்பதையே எனது நூல் விளக்கிச் சொல்கிறது.
நுண்மையும் ஒண்மையும் நிறைந்த ஒரு கருத்தை, வாசகர்களுக்கு அலுப்பூட்டாத வண்ணம், எனது ஆய்வுக் கருத்துக்களை அழகுதமிழில், பழகு தமிழில், இனிய எளிய மொழியில் தந்திருக்கிறேன்.
இந்நூலைத்தொடர்ந்து, குறளுக்குப் புதிய பொருள் என்ற எனது உரை நூலும் வெளிவர இருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
நல்ல வாழ்க்கை வாழ்ந்திட நயமான துணையாக ஞானகுருவே விளங்குகிறார் என்பதை சுவைபடச் சொல்லுகிற இந்த நூலை, அழகுற அச்சிட்டுத்தந்த கிரேஸ் பிரிண்டர்ஸ்க்கு எனது நன்றி.
தமிழ் கூறும் நல்லுலகம் எனது நூல்களை யெல்லாம் ஏற்று, என் முயற்சிக்கு உதவி, வாழ்த்தியதைப் போல், இந்த அரிய நூலையும் ஏற்குமாறு வேண்டி, வணங்கி, உங்களிடம் வழங்குகிறேன்.
ஞானமலர் இல்லம், அன்புடன் , லில்லி பவனம், to Ho o o # சென் 17 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா.
Fh -