உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் வணங்கிய கடவுள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வணங்கிய கடவுள் 9I

முறையாக திருமணம் ஆகாமல், மனம் போல விழைந்து, உடலுறவில் கலந்ததால், உண்டான பிள்ளைகள். இப்படி முறைகேடாக, தரக் கேடாக பிறந்த குழந்தைகள், அவர்களுக்குரிய தனிப் பெயர்களைக் கேளுங்கள்.

ஒழுக்கம், விழுப்பம் , நற் குடி, உயர்திணை இவற்றில் பிறந்தவர்கள் உயர்குலம் என்றும் , அஃதில்லாதவர்களை இழிந்த அல்லது தாழ்ந்த குலம் என்று அன்று வரையறுத்து வாழ்ந்திருக்கின்றார்கள்.

1. நற் குலத்தில் உயர்ந்த ஆணும் , இழிந்த குலத்தில் பிறந்த பெண்ணும் கூடி, பிறந்த பிள்ளைகளுக்கு அதுலோமர் என்பது பெயர்.

உயர்ந்த வாணினு மிழிந்த பெண்ணினும் வியந்த கூட்டத் தவரது லோமர்

(பிங்கலம் 967)

2. நற் குலத்தில் உயர்ந்த பெண்ணும், இழிந்த குலத்தில் பிறந்த ஆணும் கூடி, பிறந்த பிள்ளைகளுக்கு பிரதிலோமர் என்று பெயர் .

உயர்ந்த பெண்ணினு மிழிந்த வாணினும் வியந்த கூட்டத் தவர் பிரதி லோமர்

(பிங்கலம் 968)

3. அது லோமத்து ஆணும் , பிரதிலோமத்து பெண்ணும் கூடிப் பிறந்த பிள்ளைகளுக்குப் அந்தராளர் என்று பெயர்.

அதுலோ மகூட்டத் தானிலு மவ்வழி பிரதிலோ மகுலப் பெண்ணினு மிக்க

வியந்த கூட்டத் தவரந்த ராளர். -

(பிங்கலம் 969)