உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் வணங்கிய கடவுள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

ஆண், பெண் இருவரின் மண நிலையை, நாம் மூன்று பிரிவாகப் பிரித்துக் காண்போம்.

1. அற நிலை இன்ப இயல்.

2. மற நிலை இன்ப இயல்

3. அவ நிலை இன்ப இயல்

1. அற நிலை இன்ப இயல்:

இது அற வழியில், நீதி முறையில், பெண்ணைப் பெற்றோரும் , ஆணைப் பெற்றோரும் , ஒத்த கருத்துடன் பேசி, மணம் முடிக்கும் பெருமைக்குரிய திருமண வாழ்வியல்.

ஒத்த குலமும், ஒத்த ஒழுக்கமும் ஒத்த குணமும் ஒத்த ஆயுளும் (பிங்கலம் 765)

கொண்ட, ஆண் பெண் இருவருக் கிடையே, உற்றோர், பெற்றோர் இவர்கள் வாழ்த்துதலுடன் வாழ்ந்து, அந்த இல்லறத்தார் பெறுகிற குழந்தைகள்.

2. மற நிலை இன்ப இயல்:

ஏறு தழுவுதல் மூலமாக, வித்தையின் மூலமாக, பொருள் கொடுப் பதின் மூலமாக, வலிந்து கொள்வதின் மூலமாக, மணம் முடிப்பதை, மற நிலை என்கிறது. பிங்கலம். (766)

3. அவ நிலை இன்ப இயல்:

அவநிலை யென்றால் அறத்திற்கும் மாறான, விருப் பத்திற் கும் புறம் பான பழிநிலை, பார்ப் பவர்கள் பரிகாசத்திற் கும் , ஏச்சுக் கும் பேச்சுக்கும், இழிவுக்கும் ஆளாகிற நிலை.