பக்கம்:வள்ளுவர் வழியில் காந்தியம்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

95


காந்தியடிகள் ஒவ்வொரு சிற்றூராகச் சென்று நிலைமையை நேரிற்கண்டு, அல்லலுற்ற மக்களுக்கு ஆறுதல் கூறினார். அவர்களுடைய துயர் துடைக்கத் தொண்டு புரிந்தார். ஒருநாள் நாராயணபுரி (Narayanpur) என்ற சிற்றூரைப் பார்வையிட்டுத் தம் இருப்பிடத்திற்குத் திரும்பினார். அவர் குளிக்கும் போது சோப்புப் பயன்படுத்துவதில்லை, அழுக்குத் தேய்க்க - ஒரு கல்லையே பயன்படுத்தி வந்தார். அது மீராபென் என்ற அம்மையாரால் பல ஆண்டுகளுக்கு முன் அடிகளுக்குக் கொடுக்கப் பட்டது, அக்கல்லை அவர் பேர்த்தியான மனுபென் காந்தி நாராயணபுரியிலிருந்து எடுத்துவர மறந்து விட்டாள்.

உடனே போய் அக்கல்லை எடுத்துவரச் சொன்னார் அடிகள். மனுபென் தனியாகப் போய் அதை எடுத்துவர வேண்டுமென்பது அவர் கட்டளை. மனுபென் நாராயணபுரியை நோக்கி நடந்தாள். புறப்படும்போது காலை 9 மணி இருக்கும். வழியெல்லாம் அடர்ந்த தென்னந் தோப்புகளும், கமுகந் தோப்புகளும் மிகுந்திருந்தன. எளிதில் வழிதவறிப் போகலாம். அல்லது சமய வெறிபிடித்த கயவர்கள் அவளைத் தூக்கிக் கொண்டு சென்று விடலாம். உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு மனு நாராயணபுரியை அடைந்தாள். அக்கல்லும் கிடைத்தது. மனு பென் பிற்பகல் 2 மணிக்குக் காந்தியடிகளின் இருப்பிடத்தை வந்தடைந்தாள். இந் நிகழ்ச்சியை நினைக்கும்போதே உள்ளம் நடுங்குகிறது. கொலையும், கொள்ளையும், கீழ்ச் செயல்-