பக்கம்:வள்ளுவர் வழியில் காந்தியம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6. புலால் மறுத்தல்

இந்திய நாட்டில் தோன்றிய சமயங்கள் பல. அவை சைவம், சமணம், பௌத்தம், வைணவம் என்பன. இந்திய நாட்டுச் சமயங்கள் எல்லாம் புலால் உண்ணலை மறுத்தே கூறுகின்றன. கிருத்தவ சமயம் புலாலை மறுத்துக் கூறவில்லை. ஏசு பெருமானே மீனைப் பகிர்ந்து அன்பர்கட்கு அளித்ததாக விவிலிய நூல் கூறும். மேலும் புலால் உணவு பற்றிய கொள்கையானது நாட்டுக்கு நாடு, இடத்திற்கு இடம் மாறுபடுகிறது.

சிலர் புலால் உணவைத் தூற்றியும், பலர் புலால் உணவைப் போற்றியும் கூறுகின்றனர். புலால் உணவை மிகவும் வி நம்பிப் போற்றி வரும் மேலை நாடுகளில்கூட 'மரக்கறி உணவு உண்போர் கழகங்கள்' உள்ளன. இந்த நூற்றாண்டில் வாழ்ந்த தலைசிறந்த அறிஞர்களில் ஒருவரான பெர்னார்டு ஷா மரக்கறி உணவு உண்டவர். அவர் தொண்ணூறு ஆண்டுகட்குமேல் உயிர் வாழ்ந்தவர்.

புலால் உணவினரே, வேறு பல ஐயங்களைக் கிளப்புகின்றனர். புலால் மறுப்புக் கொள்கை உலகிலுள்ள எல்லா மக்களினத்துக்கும் பொருந்துமா? அப்படியானால் உலகின் வடமுனை, தென்முனைப்