பக்கம்:வள்ளுவர் வழியில் காந்தியம்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

105

"அருவினை என்ப உளவோ கருவியாற்

கால மறித்து செயின்"

வள்ளுவர் 'காலமறிதல்' என்னும் அதிகாரத்தை அரசியற் பகுதியில் அமைத்து எழுதியிருக்கிறார். காலமறிதல் எல்லோருக்கும் இயைந்த ஒன்று என்றாலும், சிறப்பாக அரசியல் வாதிகளுக்கு ஏற்றது. அதனால்தான் காந்தியடிகள் 'காலந் தவறாமை'யைத் தம்முடைய தலையாய கொள்கைகளில் ஒன்றாகக் கருதிக் கடைப்பிடித்து வந்தார்; குறிப்பிட்ட காலத்தில் தம்முடைய வேலைகளைத் தவறாமல் செய்து முடிப்பார்; பிறர் காலந்தாழ்த்திச் செய்தாலும் கண்டிக்காமல் விடமாட்டார்.

ஒருமுறை திலகர் பெருமான் காங்கிரசு மாநாட்டிற்கு நாற்பத்தைந்து நிமிடம் தாமதமாக வந்தார். அக்காலத்தில் திலகர் இந்திய விடுதலை இயக்கத்தின் முடிசூடா மன்னராக விளங்கினார். அவருடைய நா அசைந்தால் இந்திய நாடே அசைந்தது. 'மராட்டிய அரியேறு' என்றும், 'லோக மான்யா' என்றும் இந்திய மக்களால் பெருமதிப்போடு அழைக்கப்பட்டு வந்தார். காந்தியடிகள் அப்போது 'மகாத்மா' ஆகவில்லை. வெறும் மோகனதாஸ் கரம் சந்திர காந்தி என்ற அளவிலேயே இந்திய மக்களுக்கு அறிமுகமாயிருந்தார்; இந்திய அரசியல் உலகில் அப்பொழுதுதான் காலெடுத்து வைத்திருந்தார். இருந்தாலும் ஒரு பெரிய அரசியல்வாதி காலந்தவறி மாநாட்டிற்கு வருவதை அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. தம் பேச்சின் போது, 'திலகர் பெருமான் மாநாட்டிற்கு