பக்கம்:வள்ளுவர் வழியில் காந்தியம்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8. இல்லறம்

காந்தியடிகள் அரசியற் பணிக்காகவும், அரி ஜனங்களுக்காகவும், கோடிக் கணக்காகப் பொருள் திரட்டினார். ஆனால் அவர் இறுதியில் விட்டுச் சென்றவை, ஓரிணை செருப்பு, ஓருண்கலம், ஒரு சிறுகத்தி, ஒரு முட்கரண்டி, உடைந்த மூக்குக் கண்ணாடி, ஒரு பெட்டி ராட்டை, மூன்று குரங்குப் பொம்மைகள். இவைதாம் அவருடைய சொத்து. இவைகளும் இப்பொழுது இந்திய மக்களின் பொதுவுடைமையாகிவிட்டன. இப் பொருள்களை நோக்கும்போது அடிகளின் துறவுள்ளம் தோன்றும். அப்படியானால் காந்தியடிகள் துறவியா? துறவிக்கு ஏன் குடும்பம்? இவர் இறுதிவரை குடும்பியாகவன்றோ வாழ்ந்தார்? என்பன போன்ற வினாக்கள் எழும். இவ் வினாக்களுக்குச் சரியான விடை கூறவேண்டுமானால் 'அடிகள் இல்லறத்தில் வாழ்ந்த துறவி' என்று தான் கூறவேண்டும்.

காந்தியடிகளின் இல்வாழ்க்கை பற்றித் தமிழ்த் தென்றல் திரு வி. க. பின்வருமாறு கூறுகிறார்:

"ஒழுங்குபட்ட இல்வாழ்க்கை நடாத்தும் ஒருவன் கடவுள் ஆணைவழி நிற்பவனாகின்றான்.