பக்கம்:வள்ளுவர் வழியில் காந்தியம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

யடிகளோ ஒரு தீய நண்பனின் கூட்டுறவால் புலால் உண்ணவும் வேறு சில தீய வழக்கங்களை மேற்கொள்ளவும் தொடங்கினார்; பிறகு தாம் செய்த இக்தற்றங்களைப் பற்றிச் சிந்தித்தார்; அவர் உள்ளம் அவரை நாள்தோறும் உறுத்தத் தொடங்கியது; தாம் செய்த தவறுகளுக்காகக் கண்ணீர் வடித்தார்; தம் தவறுகளை எல்லாம் ஒரு தாளில் எழுதி, நோய்வாய்ப்பட்டுப் படுக்கையில் கிடந்த தந்தையிடம் கொடுத்தார்; அவர் படுத்திருந்த படுக்கைக்கு எதிரே உட்கார்ந்து கொண்டார். பிறகு என்ன நடந்தது என்பதைக் காந்தியடிகளே சொல்கிறார்:

‘என் தந்தை கடிதத்தை முற்றும் படித்தார். படிக்குங்கால் அவர் கண்களிலிருந்து கண்ணீர் முத்து முத்தாக வழிந்தது. கடிதமும் நனைந்து போயிற்று. ஒரு கணம் அவர் கண்ணை மூடிச் சிந்தனையில் ஆழ்ந்தார்; பின்னர்க் கடிதத்தைக் கிழித்துப் போட்டார்; கடிதத்தைப் படிப்பதற்காக எழுந்து உட்கார்ந்தவர் மீண்டும் படுத்துக் கொண்டார். நானும் அழத் தொடங்கினேன்; அவரது அளவில்லாத மனவேதனையை உணர்ந்தேன். நான் ஓர் ஓவியக் கலைஞனாக இருந்தால் அந்தக் காட்சியை இன்று படமாக எழுதி விடுவேன். இன்னும் என் உளக் கண்ணில் அக்காட்சி அவ்வளவு தெளிவாகத் தென்படுகிறது.

‘அந்த அன்புக் கண்ணீரால் என் இதயம் தூய்மை பெற்றது; பாவம் நீங்கிற்று. அத்தகைய அன்பை நுகர்ந்தோர் மட்டுமே அதன் இயல்பை

2