பக்கம்:வள்ளுவர் வழியில் காந்தியம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

மென்பதற்காகவும் ஒரு போராட்டமும் நடத்தினார். சாதிக் கொடுமைகளை ஒழிப்பதற்காக அடிகள் மேற்கொண்ட முயற்சிகள் அளவிலடங்கா.

அடிகள் ஒருமுறை வழக்கு மன்றத்தில் ம்மைப்பற்றிய விவரங்களைக் குறிப்பிட வேண்டிவந்த போது, ‘உழவன்’ என்றே குறிப்பிட்டார். உழவன் நாட்டுக்கு உயிர் நாடி போன்றவன். உழவுத்தொழில் உலகின் இதயம். உழவு நடை பெறவில்லை யென்றால் உலகம் இயங்க முடியாது. இப்பேருண்மையை உணர்ந்தே அடிகள் உழவைப் போற்றினார். உழவர் வாழும் கிராமங்கள் மறுமலர்ச்சி யடைவதற்காகத் தனி இயக்கமே தொடங்கி நடத்தினார்.

சுழன்றும் ஏர்ப் பின்ன துலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.

உழுவார் உலகத்தார்க் காணியஃ தாற்றா
தெழுவாரை எல்லாம் பொறுத்து.

பலகுடை நீழலும் தங்குடைக் கீழ்க் காண்பா

அலகுடை நீழ லவர்.

என்ற குறட்பாக்களால் வள்ளுவரும் உழவைச் சிறப்பித்துப் பேசுகிறார்.

ஆனால் இவ்வுழவர்கள் சமுதாயத்தில் எவ்வாறு மதிக்கப்படுகிறார்கள் ? ஏழைகளாகவும், நாகரிகமற்றவர்களாகவும், தாழ்த்தப்பட்டவர்களாகவும் கருதப்படுகின்றனர். ‘பட்டிக்காட்டான்’ என்று இழித்துப் பேசப்படுகிறான் உழவன். ஆனால் ‘உழவன்’ என்ற அடிப்படையின் மேல்தான் இந்திய சமுதாயம் என்னும் பெருமாளிகை நிறுவப்பட்டுள்-