பக்கம்:வள்ளுவர் வழியில் காந்தியம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3

பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழியும் நாவன்மை படைத்த வல்லாளனுமான வின்ஸ்டன் சர்ச்சில், ‘ஆங்கிலப் பேரரசில் கதிரவன் மறைவதில்லை’ என்று பெருமை பேசினான். ஆனால் அந்நாட்டில் வாழ்ந்த ஒரு பேரறிஞன் யாது நவின்றான் தெரியுமா? ‘பெருமை மிக்க ஆங்கிலப் பேரரசையும் நான் இழக்க ஒருப்படுவேன். ஆனால் சேக்ஸ்பியர் எழுதியுள்ள நாடகக் காவியத்தில் ஓரசையைக்கூட நான் இழக்க மாட்டேன்’ என்று கூறினான். அவன் கூற்று உண்மையாகிவிட்டது. ஆங்கிலப் பேரரசு சீர்குலைந்தது. ஆனால் சேக்ஸ்பியரின் அமர காவியங்கள் இன்றும் நிலவுகின்றன ; என்றும் நிலவும்.

நாட்டையும் விட, நல்லறிஞரின் நூல்கள் உயர்வாக ஒவ்வொரு மொழியினராலும் மதிக்கப் பெறுகின்றன. ஒவ்வொரு மொழியினரும், தம் மொழியில் தோன்றியுள்ள உயர்பனுவல் கட் டுரைத்த உறுதியின் வழியே, உலகப் பெரியார்கள் நின்றொழுகினர் என்று கூறிக்கொள்வதில் பெருமை கொள்கின்றனர். ‘பொய்யாமொழி’ பற்றிக் காந்தியடிகளும் ஒழுகினர் என்று ‘வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட’ தமிழ்ப் பெருமக்களும் எண்ணல் இயல்பே. ஆனால் திருக்குறள் ஒன்றே காந்தியடிகளின் கொள்கைகளை வரையறுத்துச் செப்பம் செய்தது என்று கூறல் தற்பெருமை. கீதை, விவிலியம், குர்ஆன் ஆகிய பல சமயநூல்களினின்றும், தாம் பல உண்மைகளை உணர்ந்து, அவற்றைத் தம் வாழ்வில் கடைப்-