பக்கம்:வள்ளுவர் வழியில் காந்தியம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

87


தும் அவரை இந்நோய் பற்றிக்கொண்டது. வட இந்தியாவிலுள்ள சிறந்த மருத்துவ மனைகட்கெல்லாம் சென்று மருத்துவம் செய்து கொண்டார். நோய் வளர்ந்ததே தவிர நீங்கியபாடில்லை. இறுதியில் காந்தியடிகளைச் சந்தித்துத் தம் நோயைப் பற்றிக் கூறினார். அவரை ஆசிரமத்தில் ஏற்றுக் கொண்டு மருத்துவம் செய்வதாகக் காந்தியடிகள் கூறியிருந்தார். அதற்காகவே சாஸ்திரியும் அங்கு வந்திருந்தார்.

அடிகள் சாஸ்திரியை நோக்கி, "அன்பரே! உங்களை ஆசிரமத்தில் சேர்த்துக் கொள்வது பற்றி இன்னும் நான் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். இங்குப் பல ஆடவரும் பெண்டிரும் குழந்தைகளும் இருக்கின்றனர். அவர்களையும் கலந்து பேசி உங்களுக்கு முடிவு சொல்லலா மென்றிருந்தேன்" என்று கூறினார்.

‘தங்களைக் காணப் பெற்றதே என் நற்பேறு என்று கருதுகிறேன். அதோடு நான் மனநிறைவு கொள்கிறேன். தாங்கள் எப்போது வரச் சொல்கிறீர்களோ அப்போது வருகிறேன். இன்று இரவு மட்டும் இம்மரத்தடியில் தங்கியிருக்க இணங்கினால் போதும்' என்று சாஸ்திரி கூறினார். காந்தியடிகளும் அதற்கு இணங்கினார்.

அன்று இரவு முழுவதும் அடிகளின் உள்ளத்தில் ஒரு பெரும் போராட்டம் நிகழ்ந்தது என்று சொல்லவேண்டும். தம் வாழ்வில் இந்நிகழ்ச்சி ஒரு பெரும் சோதனை என்று கருதினார். மறுநாட்