பக்கம்:வள்ளுவர் வழியில் காந்தியம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

93

காவல் நிலையத் (Police Station) திற்குப் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டார்.

காந்தியடிகள் தாக்கப்பட்ட செய்தி அடுத்த நாள் செய்தித் தாள்களில் வெளியாயிற்று. இங்கிலாந்திற்கும் இச்செய்தி எட்டிற்று, இதை அறிந்த குடியேற்ற நாட்டு அமைச்சரான திருவாளர் ஜோசப் சேம்பர்லின், காந்தியைத்தாக்கியவர்களைச் சிறை செய்து அவர்கள் மீது வழக்கு நடத்தவும்' என்று நேட்டால் அரசியலாருக்குத் தந்தியடித்தார். உடனே நேட்டாலின் அரசாங்க வழக்கறிஞர், காந்தியடிகளை அழைத்துச் சேம்பர்லினுடைய தந்தியைப்பற்றிக் கூறினார்; அடிகளைத் தாக்கியவர்களின் மீது வழக்குத் தொடரப் போவதாகவும் சொன்னார்.

ஆனால் காந்தியடிகள் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. 'யார் மீதும் வழக்கு நடத்த எனக்கு விருப்பமில்லை. குற்றம் உங்களைப் போன்ற சமூகத் தலைவர்களுடையது. நீங்கள் மக்களுக்குச் சரியான வழி காட்டியிருக்க வேண்டும். இந்தியாவில் நான் இருந்தபோது, நேட்டால் வெள்ளைக்காரர்கள் மீது ஏதோ பொய்ப் பிரசாரம் செய்ததாக நம்பி, அவர்கள் இம்மாதிரி நடந்து கொண்டிருக்கிறார்கள். உண்மையை உணரும்போது அவர்களே தங்களுடைய செயலுக்காக வருந்துவார்கள்' என்று அடிகள் கூறினார்.

காந்தியடிகள் எப்போதும் குண்டர்களுக்கு அஞ்சுவது கிடையாது. கல்கத்தாவில் இந்து

7