பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வாழ்த்து 111

தந்தை அங்குக் குறிப்பாக இன்சொல் என்று மட்டும் குறிக்கப்பட்டது. விரிவாகச் சொன்குல் 'முகத் தால் விரும்பி இனிமையாகப் பார்த்து, உள்ளத்தோடு பொருந்திய இனிய சொல்லில் அமைந்ததே அறம் ஆகும்.

வறுமையைப் போக்கும் ;

அழகினை ஆக்கும்.

கண்ணன் தந்தையே, இன்சொல் அறம் ஆவ தால் அது நல்ல பயனைத் தரவேண்டுமே?

தந்தை ஆம், "யாவரிடத்தும் இன்பத்தைப் பெருக் கும் இனிய சொல்லேச் சொல்பவர்க்குத் துன்பத்தைப் பெருக்கும் வறுமை இல்லாது போகும். -

கண்ணன் ஆம், எல்லோரிடத்தும் இனிய சொல் லால் இன்பத்தைப் பெருக்குபவனிடம் வறுமை பெருகு மாறு விட்டுவைக்க மாட்டார்கள் உலகோர்.

கண்ணம்மா வறுமை இல்லாது வாழ்தலே இல் லறத்தாருக்கு முதல் நன்மை. இன்சொல் அந்த முதல் நன்மையைத் தருவது ஆகிறது. -

கண்ணன் (கண்ணம்மாவைக் கடைக்கண்ணுல் பார்த்தவாறே)- வயிற்றுக்குச் சோறு மட்டும் இருந் தால் வாழ்வு நிறைந்துவிடுமா உடலுக்கு அழகுதரும்

SAMMAMAMSMSMSMSMMSMMSMMSMSMSMSMSMSMMSMSMAMS SAMMSMSMAAASASASS

  • முகத்தா னமர்ந்தினிது நோக்கி, அகத்தாளும்

இன்சொல் லினதே அறம். * துன்புறுஉம் துவ்வாமை இல்லாகும், யார்மாட்டும் இன்புறுஉம் இன்சொல் லவர்க்கு. -