பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

పె:సిసిసినా

வள்ளுவர் வாழ்த்து 113

செய்வான் ? சமாளித்துக் கொள்ள வேறு ஒரு விளுவை எழுப்ப முயன்ருன்.

இரட்டை இன்பம்

கண்ணன் : தந்தையே, இல்லறத்தாருக்கு வறுமை இன்மையையும், அணியையும் தரும் இன்சொல் இல் லறத்திற்கு எவ்வகைச் செழிப்பைத் தரும் ?

தந்தை இல்லறத்திற்குச் செழிப்பைத் தருவது அறச்செயல். கேட்பவர்க்கு நன்மையைத் தரும் கருத் துக்களே ஆராய்ந்து இனிய சொற்களால் சொன்னல் அறம் அல்லாதவை அழியும். அழிய அறம் வளரும். ஆராய்ந்து கூறப்படும் அரும் கருத்துக்கள் நன்மை பயப்பவை. அத்தகைய அரும் கருத்துக்களைக் கடும் சொற்களால் சொல்லலாமோ ? சொன்னல் ஏற்பவர் உண்டோ? இனிய சொல்லே விருப்பத்தோடு ஏற்க வைக்கும். விருப்போடு ஏற்கப்படும் அரும் கருத்துக் கள் தீமையான செயல்களைத் தூண்டா. துரண்டாதது மட்டுமன்று ; முன்கொண்ட தீய செயல்களையும் தேய்க் கும். ஒன்று தேயத் தேய அதற்கு மாறுபாடான மற் ருென்று வளர்வதுதானே இயற்கை. அதுபோல, தீயவை தேயத்தேய அறம் வளரும். கணவனுக்கு மனைவியும், மனைவிக்குக் கணவனும், மற்றவர்க்கு இரு வரும் இன்சொல் கூறி அறத்தை வளர்த்தால் இல்லறம் செழிப்பைப் பெறும். - கண்ணன்: தந்தையே, இல்லறத்தின் அகப்பயனை அறிந்தோம். புறப்பயன் எந்த அளவை உடையது ?

  • அல்லவை தேய அறம்பெருகும், நல்லவை

நாடி இனிய சொலின்.