பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வாழ்த்து - 121

செய்வோம். அதனல், எங்கள் பரம்பரையினரும் நின்ை வில் கொள்ளும் வகை செய்யவேண்டியவர்கள் அல் லவா ! ஆகையால், மறதிக்கு இடம் தரமாட்டோம்.

நன்று மகனே, ஆனல் மறதிக்கு இடம் தரவேண் டியதும் உண்டு. அந்த மறதியிலும் நன்மை உண்டு. உதவி செய்தவரே பின்னர் அவரையறியாமல் தீமை யைத் தந்துவிடலாம். அந்தத் தீமையை நினைவில் கொள்ளாது மறத்தல் வேண்டும். ஒருவர் செய்த உத வியை மறப்பது நல்லது அன்று. ஆல்ை, அவர் தமக்குச் செய்த தீமையைச் செய்யப்பட்ட அந்த நேரத்திலேயே மறந்துவிடுவது நல்லது ஆகும். -

அவ்வாறன்றி, தீமையை நினைவில் கொள்வதால் அவர் செய்த நன்மையை மறந்தவர்களாகச் செய்நன்றி மறந்தவர்கள் ஆவீர்கள். அது கருதித்தான் உடனே மறத்தல் வேண்டும் என்றேன். அவ்வாறு உடனே மறக்க வழியும் உண்டு. மிகக் கொடிய தீமையான லும் மறக்க வழி உண்டு. 'முன்னர் தமக்கு நல்ல உதவி செய்தவர் பின்னர் கொல்வது போன்ற துன்பத்தைச் செய் தாலும், அவர் முன்னர் செய்த உதவி ஒன்றை மனதில் கினைக்க வேண்டும். அவ்வாறு கினைத்த அளவில் அவர் செய்த துன்பம் மறைந்து போகும். உள்ளத்தின் தன் மையே ஒன்றை நினைக்க மற்ருென்று மறைவதாகும். ஆதலால் நன்மையை நினைத்தால் தீமை மறையும்.'

கண்ணன் ஆம் தந்தையே, நன்மையை நினைக்கா விடில் தீமையின் நினைவு மேலோங்கும். அதனுல் நன்

ای به دست مسیه

  • நன்றி மறப்பது கன்றன்று ; கன்றல்ல

தன்றே மறப்பது நன்று. نہ . . . . . . . . . . . . . . * கொன்றன்ன இன்ன செயினும், அவர்செய்த ஒன்றுகன் றுள்ளக் கெடும். - வ. வா-8.