பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 வள்ளுவர் வாழ்த்து

நன்று கேட்டாய் மகனே அதைத்தான் இன்று உங்களுக்கு விளக்க எண்ணினேன். ஒருவரது தகுதி யைக் கருதி அன்ருே அவரை மேல் நிலையில் வைப்பர். அத்தகையவர் செய்நன்றி காரணமாகத் தன் தகுதியை மறந்து நடுவுநிலை இல்லாமல் செயல் புரியலாமோ ? அப்படிச் செய்வதால் மற்றவர்க்குத் தீமை செய்தவர் ஆவார் அன்ருே ! ஆகவே, செய்நன்றி காட்ட வேண்டி யது தனது தனி வாழ்க்கையைப் பொறுத்தது. பிறர் வாழ்க்கையை ஈடுபடுத்திக் காட்டப்படுவது அன்று. தன் தகுதியைக் காப்பாற்ற வேண்டுமானுல் நண்பர் ஆளு. லும் செய்நன்றிக்காகத் தவறி அவர்க்கு நல்லதென்று செய்யக்கூடாது. பகைவர் ஆலுைம் தீமை செய்யக் கூடாது. நட்பும் பகையும் அற்றவர் நொதுமலர் எனப் படுவார். அவர்க்கும் மாருனவை செய்யக்கூடாது. மூவரிடத்தும் ஒரே நிலையைக் கைக்கொள்ள வேண்டும். இவ்வாறு, கட்பு, பகை, நொதுமல் ஆகிய மூன்று பகுதி தோறும் நடுவு நிலைமை என்னும் ஒழுங்கு முறையில் அமைந்து ஒழு கப் பெற்ருல்தான் அவர் பெற்ற தகுதி என்ற ஒன்று சிறந்தது ஆகும். இல்லையேல் தகுதி என் பது எதற்கு ?

உன் தாத்தா தகுதி வாய்ந்தவர். அவர் தன் தகு தியை இழந்து தன் நண்பர்க்கு நன்றி காட்டவோ, அவர் தரும் பேருதவியைப் பெறவோ விரும்பவில்லை. அவ்வாறு பெறும் உதவி பெருகி வளரும் செல்வம் ஆணு லும் நல்லதன்று. பிறர் துன்பப்படப் பழியோடு வரும் செல்வம் அது."

SAASAASAASAASAASAASAASAAAS

SAAAAAA AAAA AAAA SAAAAAMSAS A SAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS

  • தகுதி எனவொன்று கன்றே, பகுதியால்

பாற்பட் டொழுகப் பெறின். -